கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா,முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிசாமி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்ட அரங்கிற்குள் வந்த உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் மேடையேறிய அவருக்கு கோவை மாநகர் மாவட்டம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.மேலும் சேலத்த நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கான நிதியின் முன்பணமாக கோவை மாநகர்,வடக்கு மற்றும் தெற்கு என மூன்று மாவட்டங்கள் சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டது.இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக பெறபட்ட 2 லட்சத்து ஐந்தாயிரம் கடிதங்களை மூன்று மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கு உங்களை அழைப்பதற்காக வந்துள்ளேன் என்றார்.கோவைக்கும் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கோவையில் கலைஞர் கால் படாத இடமே இல்லை எனவும் நினைவு படுத்தினார்.மேலும் கோவையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர்,இன்று மாநாட்டு நிதியாக 3 கோடியே 37 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்திலேயே அதிக நிதி வழங்கியது கோவை மாவட்டம் தான் எனவும் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருந்தாலும் 1980 ல் இளைஞர்களுக்காக அணி துவங்கப்பட்டது திமுக வில் தான் என்றும் தேர்தலுக்கு முன்பாக இயக்கங்கள் நடத்தும் அது தேர்தலுக்காக தான் ஆனால் இளைஞர்களுக்காக தற்போது ஒரு வாய்ப்பை முதல்வர் கொடுத்திருக்கிறார் என்றால் அது உங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில் தான் எனவும் கூறியதுடன் அனைவரும் குடும்பத்துடன் வந்து மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது எதற்காக நடத்தப்பட்டது என நடத்தியவர்களுக்கும் தெரியாது கலந்து கொண்டவர்களுக்கும் தெரியாது எனவும் மாநாட்டில் சாப்பாடு எப்படி இருந்தது எனதான் கேட்டார்கள் என கூறியதுடன் மாநாடு எப்படி நடத்தக்கூடாதோ அதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடத்தப்பட்டது எனவும் விமர்சித்தார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிர் பேருந்து திட்டம்,காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களையும் மகளிர் உரிமை தொகை திட்டம் போன்றவற்றையும் சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் முதல்வர் என்றார்.ஜெயலலிதா இருந்தவரை நீர் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை ஆனால் அடிமைகள் ஆட்சியில் நீட் தேர்வு பாஜக நிர்பந்தத்தால் வந்தது என்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் 60 லட்சம் பேர் கையெழுத்திட்ட கடிதங்கள் இதுவரை பெற்றுள்ளதாகவும் மாநாட்டிற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் மேலும் கடிதங்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் மாநாட்டு மேடையில் வைத்து முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்றும் கூறினார்.மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் 5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு என கூறப்பட்டுள்ள நிலையில் இது தேவையா என கேள்வி எழுப்பிய அவர் அதன் காரணமாகத்தான் புதிய கல்வி கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு வரித்தொகையாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கொடுத்து அதில் 2 லட்சம் மட்டுமே தமிழகத்திற்கு பெற்றுள்ளோம் எனவும் ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்பது லட்சம் கோடி கொடுத்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசுகிறார்.அவருக்கு எங்கு சென்றாலும் என்னை பற்றிய நினைப்பு தான் எனவும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது கலைஞர் குடும்பம் தான் என மோடி சொல்லுகிறார்.ஆமாம் இங்கு உள்ளவர் அனைவருமே கலைஞர் குடும்பம் தான் எனவும் மோடியால் வாழ்ந்துள்ளது அவரது நெருங்கிய நண்பரான அதானி தான் என்றும் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றது எப்படி என ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் கேட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேபோல் 9 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் பட்டியலை சி ஏ ஜி வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழரை லட்சம் கோடி எங்கு சென்றது என தெரியவில்லை என்றும் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்தது பாஜக அரசு எனவும் ரமணா திரைப்பட பானியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இறந்த 88 ஆயிரம் பேருக்கு மருத்யுவ காப்பீடு திட்டம் கொடுத்துள்ளது பாஜக அரசு என்றும் குற்றம் சாட்டினார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக விரட்டிய நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக வின் ஓனர்சை அடித்து விரட்ட வேண்டிய நேரம் எனவும் கூறிய உதயநிதி,பூட்டு, சாவி,சுத்தியல் என தமிழ்க மக்களை பூட்டாகவும் சாவியாக திமுக வையும் சுத்தியலாக பாஜக தலைமை தலைமையிலான மத்திய அரசையும் சுட்டிக்காட்டி குட்டிக்கதை கூறி பாஜக வை கடுமையாக சாடினார்..
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!