உணவு பார்சலுக்கு கட்டணம்-உணவகத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்...

published 1 year ago

உணவு பார்சலுக்கு கட்டணம்-உணவகத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்...

கோவை: தனியார் உணவகத்தின் பெயருடன் வழங்கப்பட்ட உணவு பார்சலுக்கு கட்டணம் வசூலித்த பிரபல உணவகத்திற்கு அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சேக்முகமது (34). இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல தனியார் (ஆனந்தாஸ்)  உணவகத்தில், பிரைடு ரைஸ் உணவு வாங்கியுள்ளார்.

அதன் விலை ரூ.160"ஆக இருந்த நிலையில் -  பார்சல் செய்து கொடுத்த கண்டைனருக்கு ரூ.5.71 கூடுதலாக கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

ஆனால் கண்டைனரில் அந்த உணவகத்தின் பெயர் இலக்சினை (LOGO) இடம் பெற்றிருந்தது.

உணவு பார்சல் கொடுத்த கண்டைனருக்கு கட்டணம் வசூல் செய்த நிலையில் 
அதில் உள்ள அவர்களது நிறுவன லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாக பயன்படுத்தியதாகவும்,
இது தொடர்பாக விளக்கம் கேட்டு சேக்முகமது அந்த தனியார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் அந்நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில்,. சேக்முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

கடந்த ஓராண்டாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்த தனியார் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு  உணவு பார்சல் கொடுக்கும் கண்டைனரில் உணவகத்தின் லோகோ வை பயன்படுத்த கூடாது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் வாடிக்கையாளரான சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ,10 ஆயிரம் மற்றும்  வழக்கு செலவீனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் கொடுக்கும் கண்டைனர் மற்றும் பைகளில் விளம்பரமாக கொடுப்பதோடு அதற்காக பார்சல் கட்டணம் என வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe