பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்...

கோவை: தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும், ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அளிக்க வேண்டும், கல்வி, திருமண உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும், வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தை பொங்கல் சிறப்பு போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe