ஆன்லைன் செயலி மூலம் இரண்டாயிரம் கோடிக்கு மேல் நூதன மோசடி...

published 1 year ago

ஆன்லைன் செயலி மூலம் இரண்டாயிரம் கோடிக்கு மேல் நூதன மோசடி...

கோவை: ஈவிகோ( EVGO) என்ற தொழில் சார்ந்த  ஆன்லைன் செயலி,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது.  இந்த செயலின் நிறுவனர் வீசிஸ் தேசாய் எனவும், அவருக்கு கீழே ராக் ஸ்டா என்ற நபர் இருப்பதாக குறிப்பிட்டு மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ளனர். முதல் திட்டத்தில்  680 ரூபாய் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 1295 ரூபாய் கிடைக்கும். இரண்டாவத் திட்டத்தில் 6000 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 480 ரூபாய் வீதம்  52 நாட்களுக்கு 24,960 ரூபாய் கிடைக்கும். மூன்றாவது திட்டத்தில்  58000 முதலீடு செய்தால் தினமும் 5200 ரூபாய் வீதம் 20 நாட்களுக்கு 1,52,000 ரூபாய் கிடைக்கும் என விளம்பர படுத்தியுள்ளனர்.

மேற்கண்ட திட்டங்களில் பணம் செலுத்தியவர்களுக்கான தொகையை ஈவிகோ நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. இதனை நம்பி தங்களது உறவினர்கள் மற்றும் அருகிலிருப்பவர்கள் என  கோவை, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் வாட்ஸ் ஆஃப் செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகோ செயலி செயல்படவில்லை. வாட்ஸ் ஆஃப் குழு இருப்பதால், அதில் தகவல் வரும் என லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் காத்திருந்துள்ளனர்.

முதலீட்டாளர் ஒருவர், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஈவிகோ நிறுவனத்திடம் மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அது போலிச்செயலி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர்,  சுமார் 30 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தருமாறு புகாரளித்தனர்.

ஏமாற்றப்பட்டது குறித்து பாதிகப்பட்டவர்கள் கூறுகையில், இந்தியா முழுவதும் இச்செயலி மூலம் பொதுமக்களிடமிருந்துஇச்செயலி மூலம் 
2000 கோடிக்கு மேல் பணம் பெற்று   ஏமாற்றப்பட்டிருக்கலாம். தற்போது இதே போல புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

காவல் துறை தேசாயை கைது செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனர்.
மக்களின் ஆர்வத்தை தூண்டி , ஆசைகளை வளர்த்து மோசடி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் குறித்து காவல் துறை எச்சரித்தாலும், மக்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe