மத்திய அரசின் திட்டங்கள் இவ்ளோ இருக்குங்க.. கிராமங்களை நோக்கி பயணம் செய்யும் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்

published 1 year ago

மத்திய அரசின் திட்டங்கள் இவ்ளோ இருக்குங்க.. கிராமங்களை நோக்கி பயணம் செய்யும் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்

கோவை: மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சி இன்று கோயம்புத்தூர் மாவட்டம் தீத்திபாளையம் பகுதியில் நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் இந்த நிகழ்சி நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையம், தபால் துறை, சுகாதாரத்துறை, வங்கிகள், எரிவாயு நிறுவனங்கள் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கும்,

 

செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் 6 பயனாளிகளுக்கும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் 2 பயனாளிகளுக்கும், முத்ரா கடன் உதவி திட்டத்தில் இருவருக்கும் திட்டப்பயன்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் உர நிறுவனம் சார்பில் விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe