கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் புதிய அதிகாரி பொறுப்பேற்பு

published 2 years ago

கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் புதிய அதிகாரி பொறுப்பேற்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை, ஜூலை.1 கோவை ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெற்ற நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையுடன் கமோடர் அசோக் ராயிடமிருந்து கமாண்டர் மன்மோகன் சிங் பதவியை ஏற்றுக்கொண்டார். கமோடர் அசோக் ராய் 2019 மே 30 முதல் அக்ரானியின் பொறுப்பை வகித்து வந்தார்

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவரான கமாண்டர் மன்மோகன் சிங், 1992 ஜனவரி 1-ம் தேதி இந்தியக் கடற்படையில் பணியமர்த்தப்பட்டார் மோவ்வில் உள்ள ராணுவப் போர்க் கல்லூரியில் உயர் கட்டளைப் படிப்பில் பயின்றவர். இவா் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைகள் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

கமாண்டா் மன்மோகன் சிங் மைன்ஸ்வீப்பர் (ஐஎன்எஸ் காக்கிநாடா), ஏவுகணைக் கப்பல் (ஐஎன்எஸ் பிரலயா) மற்றும் போர்க் கப்பல் (ஐஎன்எஸ் ராணா) ஆகியவற்றுக்கு கட்டையிட்டு பொறுப்பு வகித்துள்ளார்

கிழக்கு கடற்படையின் கடற்படை பீரங்கி இயக்க அதிகாரி, முக்கிய கரையோர நியமனங்களில் வியூகப் பிரிவின் செயல்பாட்டு அதிகாரி, மேற்கு கடற்படையின் பீரங்கி இயக்க கட்டளை அதிகாரி மற்றும் இந்தியக் கடற்படை அகாதெமியின் (எழிமலா) முதன்மை இயக்குநராகப் பொறுப்பு ஆகியவற்றை வகித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe