கோவை-பெங்களூர் உட்பட புதிய வந்தே பாரத் ரயில்கள்; மோடி தொடங்கி வைத்தார்

published 1 year ago

கோவை-பெங்களூர் உட்பட புதிய வந்தே பாரத் ரயில்கள்; மோடி தொடங்கி வைத்தார்

கோவை: கோவையில் இருந்து பெங்களூர் உட்பட 6 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி அயோத்தியில் இருந்து இன்று தொடங்கி வைத்தார்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் சென்றுள்ளார். அயோத்தில் இன்று சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
முன்னதாக அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு  பயணிகள் ரயிலை பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இது, ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. இதோடு ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அதில் கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ஒன்று.

கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இருமுறை இயக்கப்பட உள்ளது. கோவையில் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு 7.20, தருமபுரிக்கு 8.32, ஒசூருக்கு 10.05, பெங்களூரை பகல் 11.30 மணிக்கு சென்று அடைகிறது.

 மறுமாா்க்கத்தில் நண்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஒசூருக்கு 2.50, தருமபுரிக்கு 4.16, சேலத்திற்கு 5.53, கோவையை இரவு 8 மணிக்கு வந்து அடைகிறது. 
கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1,000, எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1,850 ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை விட புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5.40 நிமிடத்தில் போய்விட முடியும். தற்போது தனியார் பஸ்களில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரை குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் வரவேற்பு உள்ளது.

மேலும் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதால் ரயிலுக்கு வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe