இந்தாண்டு கோவையில் எத்தனை குற்றங்கள், எத்தனை- புள்ளி விவரங்களை புட்டுப்புட்டு வைத்த கமிஷனர்..!

published 1 year ago

இந்தாண்டு கோவையில் எத்தனை குற்றங்கள், எத்தனை- புள்ளி விவரங்களை புட்டுப்புட்டு வைத்த கமிஷனர்..!

கோவை: இந்த ஆண்டு மாநகர காவல் துறையின் கீழ் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார் மாநகர காவல் ஆணையாளர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் இந்த வருடம் கோவை மாநகரில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை காவல்துறை எவ்வாறு கையாண்டது என்பது பற்றிய ஆய்வு இன்று நடத்தப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 2022ம் வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் ஆதாய கொலை வழக்கு எதுவும் இல்லை எனவும் கூட்டுக் கொள்ளை கடந்த வருடத்தில் 11 வழக்குகள் இருந்த நிலையில் இந்த வருடம் மூன்று வழக்குகள் மட்டும் பதிவாகி மூன்று சம்பவத்திலும் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

வழிப்பறியைப் பொறுத்தவரை கடந்த வருடம் 187 வழக்குகள் பதிவான நிலையில் இந்த வருடம் 58 சதவிகிதம் குறைந்து 78 வழக்குகள் மட்டும் பதிவாகி இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நுண்ணறிவு பிரிவின் முன்னறிவிப்பை முறையாக ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக பெரிய அளவு எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லை எனவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான வழக்குகளை பொருத்தவரை கொலை வழக்குகளில் 22 வழக்குகளே பதிவாகி இருப்பதாகவும் கொலை முயற்சி வழக்குகளை பொருத்தவரை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 45 சதவீதம் குறைந்து 35 வழக்குகள் மட்டும் பதிவாகி இருப்பதாகவும், கழகம் செய்யும் வழக்குகளை பொருத்தவரை 13 வழக்குகள் மட்டும் இந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும் காயம் ஏற்படுத்தும் வழக்குகள் கடந்த ஆண்டு 517 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த வருடம் 37 சதவிகிதம் குறைந்து 324 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

குற்ற வழக்குகளையும் சட்டம் ஒழுங்கு வழக்குகளையும் பார்க்கும் பொழுது கடந்த வருடத்தை விட இந்த வருடம் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாகவும் குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள், அதை நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், நம் கோவை நம் பாதுகாப்பு என்ற டேக் லைன் மூலம் தெருக்களில் உள்ள வணிக நிறுவன மக்களை அணுகி சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் Hot Spot என்ற சட் ஒழுங்கு பிரச்சனைகள் பதிவான இடங்களை ஆய்வு செய்து அந்த இடங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியதன் மூலம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 1200 பிடியாணைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தை பொருத்தவரை 89 வழக்குகள் இந்த ஆண்டு போடப்பட்டுள்ளதாக கூறிய அவர் குண்டர் சட்டங்களை போடும் எண்ணம் இல்லை எனவும் ஆனால் பொருள் தொடர்பான வழக்குகளில் கடந்த வருடம் 16 நபர்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 25 பேர்களாக அதிகரித்துள்ளதன் காரணமாக சட்டங்களை போடுவதாகவும் தெரிவித்தார். 

இவை மட்டுமின்றி கோவை மாநகரில் U Turn, Remote Signal, Speed Radar Gun, காவலர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சிகள், காவல் வனம் போன்ற பல்வேறு செயல்முறைகளை செயல்படுத்தி வருவதாகவும் Speed Radar Gun மூலம் 476 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே 14 Boys and Girls Club இருந்த நிலையில் இந்த வருடம் மட்டும் புதிதாக 9 Club திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் இந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும் வரக்கூடிய 2024ம் ஆண்டு முக்கியமான சவாலாக போதைப்பொருள் தடுப்பை பார்ப்பதாகவும் விபத்துகளை குறைப்பதற்கும் குற்றங்களை குறைப்பதற்கும் சிசிடிவி கேமராக்களை அதிக ப்படுத்த இருப்பதாகவும் இவற்றிற்கெல்லாம் அதிக கவனம் செலுத்தி செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe