இட்லி, தோசை கூட ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கிறீர்களா... புது காம்பினேஷன், புது ருசி... உடனே செஞ்சு அசத்திருங்க...

published 1 year ago

இட்லி, தோசை கூட ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கிறீர்களா... புது காம்பினேஷன், புது ருசி... உடனே செஞ்சு அசத்திருங்க...

எப்பொழுதும் போல இட்லி, தோசையை சாம்பார் சட்னியுடன் சாப்பிட்டு அலுத்துவிட்டது தானே… காலை உணவு ஏதாவது ருசியாக சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதா… இட்லி தோசையுடன் இந்த ரசத்தை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்… சான்ஸே இல்லைங்க, அப்படி ஒரு டேஸ்ட்…

தேவையான பொருட்கள் :

இட்லி/ தோசை -5

ரசம் வைக்க :

தனியா: 1 தே. கரண்டி

காய்ந்த மிளகாய்: 3

மிளகு: 5 - 6

துவரம்பருப்பு: 1 தே. கரண்டி

கடலை பருப்பு: ½ தே. கரண்டி

சீரகம்: சிறிதளவு

தக்காளி: 1/2 கப்

பூண்டு: 4 பற்கள்

புளி தண்ணீர்: 1/4 கப்

மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை

பெருங்காயப் பொடி: ஒரு சிட்டிகை

உப்பு: தேவையான அளவு

கறிவேப்பிலை: சிறிதளவு

கொத்தமல்லித் தழை: சிறிதளவு

செய்முறை :

# தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். 

#பின் மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

#அடுத்ததாக தக்காளியைக் கரைத்து அதில், புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

#பின்னர் உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து பூண்டை தட்டிப் போட்டு, கருவேப்பிலை, கொத்தமல்லியை நறுக்கிப் போடுங்கள்.

#தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டுத் தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.

#அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வைத்து கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.

பரிமாறும்போது இட்லி அல்லது தோசையை வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி கொடுங்கள். தேவைப்பட்டால் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வைத்துக்கொள்ளலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe