உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்து- வாயு வெளியேறுவதால் தடுக்கும் முயற்சி தீவிரம்...

published 2 days ago

உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்து- வாயு வெளியேறுவதால் தடுக்கும் முயற்சி தீவிரம்...

கோவை: உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து நிகழ்ந்த நிலையில் கேஸ் வெளியேறி வருவதால் தடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் பொழுது லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறி உள்ளது உடனடியாக லாரியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.

இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேஸ் முழுவதும் வெளியேற்றபட்டாலோ அல்லது கேஸ் முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டாலோ தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கேஸ் நிறுவன பொறியாளர்கள் என பலரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 

அதிகாலை நடந்த இந்த விபத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe