தமிழகத்தில் BMW கோல்ஃப் கோப்பை போட்டி!

published 1 year ago

தமிழகத்தில் BMW கோல்ஃப் கோப்பை போட்டி!

சென்னை: பி.எம்.டபுள்யூ., இந்தியா,மிகோப்பைபெரிய அமெச்சூர் கோல்ஃப் போட்டியின் இந்திய பதிப்பான பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை 2024-ஐ சென்னையில் தொடங்குகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோல்ஃப் போட்டிகள் சென்னை,பெங்களூரு,ஹைதராபாத்,புனே,மும்பை,அகமதாபாத்,நொய்டா,கொல்கத்தா மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் உள்ள கண்கவர் கோல்ஃப் மைதானங்களில் நடைபெறும்.

பிராந்திய போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் நேஷனல் பைனல்ஸில் மோதுவார்கள்.

உலகின் மிகப்பெரிய அமெச்சூர் கோல்ஃப் போட்டித் தொடரில் ஒன்றான பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை-இன்வேர்களை கால் நூற்றாண்டிற்கு முந்தைய, இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட தொரு முன்முயற்சியில் கண்டறிய முடியும்.

அது சர்வதேச நிலைக்குச் செல்வதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் உள்நாட்டு அளவில் இயங்கியது. இங்கிலாந்தில் பி எம் டபுள்யூ அழைக்கப்படுவோர் மட்டும் பங்கேற்கும் போட்டியாக இந்தப் போட்டி தொடங்கியது.

தற்போது 50 நாடுகளில் இருந்து 100,000 வீரர்கள் பங்கேற்கும் 1,000 தகுதிப்போட்டிகள் கொண்ட உலகளாவிய தொடராக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சிறந்த வீரர்கள், பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை வேர்ல்ட் பைனலுக்கு தகுதி பெறுகின்றனர்.

பி எம் டபுள்யூ குரூப் இந்தியாவின் தலைவர்  விக்ரம் பவாஹ் கூறுகையில்,"பி எம் டபுள்யூ இந்தியா தொடர்ந்து கோல்ஃப் விளையாட்டிற்கு ஆதரவு தருகிறது. நாட்டில் அடிமட்டத்திலிருந்து தொழில்முறை நிலை வரை அதனை வளர்த்தெடுத்து வருகிறது. பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு முன்மாதிரியான போட்டியாக உள்ளது.

ஒரு விதிவிலக்கான தளத்தை வழங்குவதன் மூலம்,அமெச்சூர் கோல்ப் வீரர்கள் நாட்டிலுள்ள சில சிறந்த கோல்ஃப் மைதானங்களின் வியக்க வைக்கக்கூடிய அமைப்புகளுக்கு மத்தியில் தங்கள் திறமைகளை செம்மைப்படுத்தவும் வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி, பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை ஆண்டின் முக்கிய சிறப்பம்சமாகவும், ஒவ்வொரு ஆண்டும் அமெச்சூர் கோல்ஃபர்கள் வெல்ல விரும்பும் பட்டமாகவும் உள்ளது."என்று தெரிவித்தார்.

பிரத்தியேகமாக அழைப்போர் மட்டுமே பங்குபெறும் நிகழ்வான, பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை 2024-ல் நாட்டில் உள்ள அங்கீகரிக்கோப்பைபட்ட கோல்ஃப் கிளப்ஸில் உறுப்பினர்களாக இருக்கும் கோல்ஃபர்கள் பங்கு பெறலாம்.அந்தந்த உள்ளூர் கோல்ஃப் கிளப்பின் விதிகளின் படி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு விசுவாசத் திட்டமான இது, பி எம் டபுள்யூ வாடிக்கையாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய அமெச்சூர் கோல்ஃப்போட்டிகளுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வழங்குகிறது.

பி எம் டபுள்யூ இந்தியா டீலர்கள் பி எம் டபுள்யூ உரிமையாளர்களிடையே இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ள அமெச்சூர் கோல்ஃபர்களை அடையாளம் காண்பர்.

100,000 வீரர்கள் பங்கேற்கும் 1,000 தகுதிப் போட்டிகளைக் கொண்ட உலகளாவிய தொடரான பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை 2024 வேர்ல்ட் பைனலில் பங்கேற்கும் 50 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பி எம் டபுள்யூ கோல்ஃப் கோப்பை வாடிக்கையாளர்கள்,வாடிக்கையாளராக வாய்ப்பு உள்ளோர் மற்றும் ஊடகங்களில் அதிக கவனம் பெறுவோருக்காக வடிவமைக்கோப்பைபட்ட ஒரு அமெச்சூர் கோல்ஃப் போட்டித் தொடராகும். மேலும் இது ஒரு பிரத்யேக சமூகத் தொடர்புக்கான சரியான கலவையை வழங்குகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe