தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம்? : கோவையில் அமைச்சர் விளக்கம்!

published 1 year ago

தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம்? : கோவையில் அமைச்சர் விளக்கம்!

கோவை: கோவை சூலூர் பகுதியில் உள்ள KMCH மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  KMCH மருத்துவமனையை 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 200 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது எனவும் தற்போது 2000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை விரிவடைந்துள்ளது எனவும் இதன் மூலம் கலைஞர் கருணாநிதி கைராசிக்காரர் என்பதும், அவர் தொட்டது துலங்கும் என்பதும் நிரூபணமாகியுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதயமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில் தற்போது கல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உட்பட 8 பொறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் 5 லட்சம் ரூபாய் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 1500  மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe