பேரூர் தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற சிந்து முதல் பொருநை வரை கருத்தரங்கம்…

published 1 year ago

பேரூர் தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற சிந்து முதல் பொருநை வரை கருத்தரங்கம்…

கோவை: கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிந்து முதல் பொருநை வரை என்கின்ற மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார்.

திருப்பேரூர் ஆதீனம் 25"ஆம் பட்ட குருமகா சந்நிதானங்கள்  அருளுரை ஆற்றினார். 
வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் நோக்கங்களைப் பற்றி கருணாந்தன் சிறப்புரையாற்றினார்.

பழங்கற்காலம் கொற்கை கீழடி ஆகிய இடங்களில் நடைபெற்ற  தொல்பொருள் அகழாய்வுகள் குறித்து இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பில் பணியாற்றுகின்ற அமர்நாத் ராமகிருஷ்ணா  சிறப்புரை ஆற்றினார். 
ஒடிசா அரசின் முதன்மை ஆலோசகர் மதிப்புறு முனைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளுடன் அவை பொருந்தி இருப்பதை சங்க இலக்கியப் பாடல் வரிகளோடு ஒப்பிட்டு, சங்க இலக்கியம் என்பது தோண்டப்படாத கீழடி. கீழடி என்பது வாசிக்கப்படாத சங்க இலக்கியம் என்கின்ற பொருண்மையிலான சிறப்புரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் தொல்லியல் அகழாய்வுப் புகைப்படக் கண்காட்சியைக் கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe