ரேஷன் கடைகளில் கிடைக்குமா பாரத் ஆட்டா, பாரத் அரிசி?

published 1 year ago

ரேஷன் கடைகளில் கிடைக்குமா பாரத் ஆட்டா, பாரத் அரிசி?

கோவை: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி வரும் பாரத் ஆட்டா, பாரத் அரிசி ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் கோதுமை மாவு பாரத் ஆட்டா என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.27.50க்கும், பருப்பு வகைகள் பாரத் டால் என்ற பெயரில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே அரிசி விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பாரத் அரிசியை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கிலோ ரூ.29க்கு பாரத் அரிசியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் பாரத் அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி விற்பனை துவங்க உள்ளது.

இதற்காக தமிழகத்திற்கு 1000 டன் கோதுமையும்,  22,000 டன் அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரத் அரிசி இந்த வாரம் முதல் கடைகளில் 5 மற்றும் 10 கிலோ பைகளில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணையம் மூலமும் இதனை வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதே போல் பாரத் டால் என்ற பெயரில் பருப்பு வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றை ஏழை மக்கள் எளிமையாக வாங்கும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe