கோவையில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டு போட்டி- பரிசுகள் வழங்க உள்ள டிஜிபி சங்கர் ஜிவால்...

published 1 year ago

கோவையில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டு போட்டி- பரிசுகள் வழங்க உள்ள டிஜிபி சங்கர் ஜிவால்...

கோவை: கோவையில் நடைபெற்ற
மண்டல அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள்
டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பரிசளிக்க உள்ளார்.


கோவை: தமிழ்நாடு காவல் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 63-வது  மண்டலங்களுக்கு இடையேயான காவல்துறையினரின் தடகளபோட்டிகள் தொடக்க விழா கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபமேற்றி தொடங்கி வைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, ஆயுதப்படை ஐ.ஜி. லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தப் போட்டியில், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு ஆகிய 9 அணிகளை சேர்ந்த காவல்துறை வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 743 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு 10 ஆயிரம் மீ தூர ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 1,500 மீ தூர ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 

நேற்று முன்தினம் நடந்த பொதுப்பிரிவு ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஆயுதப்படையை சேர்ந்த மணிகண்டன் முதலிடம் , மோனிஷ் 2-ம் இடம், மேற்கு மண்டலத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் 3-ம் இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் சென்னை பெருநகர காவல்துறையின் சசிகலா முதலிடம், மேற்கு மண்டலத்தின் மகேஸ்வரி 2-ம் இடம், சென்னை பெருநகர காவல்துறையின் செர்மாசித்ரா 3-ம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம், ஐ.ஜி.க்கள் லட்சுமி, பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து நேற்றும் போட்டிகள் நடந்தது. 

இந்த போட்டியின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொள்கிறார். அவர் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe