கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

published 1 year ago

கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

கோவை: கோவையில் 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.

கோவை வஉசி மைதானத்தில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதன் பாதுகாப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

 

1000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ,5 கி.மீ,3 கி.மீ என மூன்று பிரிவுகளாக ஓடினர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான்  பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளதாகவும், இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய்களை முழுமையாக புற்று நோய்க்காக செலவு செய்யப்படும் எனவும் கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் பிரவீன்ராஜ் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe