தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு!

published 11 months ago

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் எனப்படும் நோய்  கழிவு நீர் வழியாக பரவுகிறது.  அதாவது அசுத்தமான நீரை  அருந்தும் போது இந்நோய் பரவுகிறது. அதோடு கழிவு நீர், மலம் வழியாகவும் பரவும்.

பொதுவாக ஏதேனும் நோய் ஏற்பட்டால் அறிகுறிகள் மூலமாக அதனைக் கண்டறிந்து விடலாம். ஆனால் போலியோவால்  பாதிக்கப்பட்டால் 90 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் தோன்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. தீவிரமாக பரவும் பட்சத்தில்  முடக்கு வாதம், பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. 

மிகவும் தீவிரம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் போலியோ நோயைத் தடுக்க வாய் வழியாக செலுத்தப்படும்  சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் குழந்தைகள் போலியோ நோயினால்  பாதிக்கப்படாமல் இருப்பதற்காக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பயன் பெறுகின்றனர். 

முகாம் அறிவிப்பு

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான சொட்டு மருந்து வழங்கும் முகாம் மார்ச் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த முகாமானது காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமாா் 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் வழங்கவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது. 

குறிப்பாக எளிதில் அடைய  முடியாத பகுதிகளில் இருக்கும்  குழந்தைகளுக்கு  நடமாடும் குழுக்கள் மூலம்  சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் 3,000 வாகனங்களில் மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ரத்தினபுரியில் மணிபர்சை திருடிய வாலிபர் கைது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe