போலியோ சொட்டு மருந்து முகாம்- கோவையில் 3 லட்சத்திற்கும் மேல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு...

published 11 months ago

போலியோ சொட்டு மருந்து முகாம்- கோவையில் 3 லட்சத்திற்கும் மேல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு...

கோவை: இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், என பல்வேறு பகுதிகளில் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

அதன்படி கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், டோல்கேட், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராம மையங்கள் 497 நகர்புற மையங்கள் என மொத்தம் 1585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

 

கோவை மாவட்டத்தில் சுமார் 3.1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். மாநகராட்சி பகுதியில்  சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe