கோவையில் விக்கல் எடுத்து தவித்த மூதாட்டி- தண்ணீர் கொடுத்து உதவிய பெண் காவலருக்கு மூதாட்டி ஆசிர்வாதம்...

published 11 months ago

கோவையில் விக்கல் எடுத்து தவித்த மூதாட்டி- தண்ணீர் கொடுத்து உதவிய பெண் காவலருக்கு மூதாட்டி ஆசிர்வாதம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவர்களது மனுக்களை அளிக்க வந்திருந்தனர். 

 

அதன் ஒருபகுதியாக சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வசித்து வரும் 85 வயதான கருப்பாத்தாள் என்ற மூதாட்டி தனது மகன்  தன்னை கவனித்துக் கொள்ளாமல் சொத்து மட்டும் எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்வதாக கூறி இளைய மகள் ருக்மணியுடன் நான்கு சக்கர நாற்காலியில் மனு அளிக்க வந்திருந்தார்.

மனு அளித்து விட்டு வெளியில் வந்த நிலையில் ருக்மணி மூதாட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் ஓரமாக அமர வைத்துவிட்டு உண்பதற்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்துவிட்டு மனு சம்பந்தமாக அலுவலர்களை பார்க்க சென்றுள்ளார். மூதாட்டி சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் எடுத்துள்ளது. 

அப்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்து தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பவானி என்ற பெண் காவலர் ஓடிச்சென்று மூதாடிக்கு தண்ணீர் குடிக்க உதவியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மூதாட்டி பெண் காவலர் தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார். அதை பெண் காவலரும் பணிவாக ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து மூதாட்டி கருப்பாத்தாள் கூறுகையில், தனது கணவர் அரசு வேலை செய்து வந்ததாகவும் தனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருப்பதாக கூறினார். கணவர் இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய இளைய மகள் ருக்மணி தான் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஆனால் என்னுடைய மகன் குணசேகரன் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதித் தருமாறு கேட்டு துன்புறுத்தி வருவதாகவும் கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ருக்மணி கூறுகையில் அம்மாவை பார்ப்பதற்கு கூட என்னுடைய அண்ணன் குணசேகரன் வருவதில்லை எனவும் மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் சொத்தை மட்டும் எழுதிக் கொடுக்க நிர்பந்திப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe