சிறுமுகை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ராட்சத முதலை...

published 11 months ago

சிறுமுகை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ராட்சத முதலை...

கோவை: தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63 அடியாக சரிந்துள்ளது. மேலும்,பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது.

இதனிடையே சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது,வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது.உற்றுப் பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe