கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் திமுகவினரின் இரண்டு போஸ்டர்கள்...

published 11 months ago

கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் திமுகவினரின் இரண்டு போஸ்டர்கள்...

கோவை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தற்போது போஸ்டர்கள் மூலம் அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் சார்பில் நடிகர் வடிவேலுவின் கார்டூன் அனிமேஷன் புகைப்படத்துடன் பாஜக அரசை விமர்சித்து சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி என குறிப்பிட்டு 

கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு,  அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு போஸ்டரில் கோவையில் பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆமா குடும்ப ஆட்சி தான் தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி" என தமிழக அரசின் நான் முதல்வன், உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள மகள், மகன், அம்மா உள்ளிட்டோருக்கு  தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  

மேலும் இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இணையத்திலும் வைரலாகி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe