மீண்டும் அதிரடி உயர்வு... ரூ.50,000ஐ நெருங்கிவிட்டது தங்கம் விலை!

published 11 months ago

மீண்டும் அதிரடி உயர்வு... ரூ.50,000ஐ நெருங்கிவிட்டது தங்கம் விலை!

தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.50,00ஐ நெருங்கியது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை கடந்த 17ம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்தது. கடந்த 18ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. இதற்கு முன் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது.

ஷ்காலர்ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்… https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இப்படி தொடர்ச்சியான விலை குறைவால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. கடந்த 19ம் தேதி பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது. 20ம் தேதி ரூ.360 உயர்ந்தது. நேற்று தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.40 அதிகரித்தது.

இதனிடையே தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,235க்கும் ஒரு பவுன் ரூ.49,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.616 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,107க்கும் ஒரு பவுன் ரூ.40,856க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500க்கும் விற்பனையாகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe