சென்னை, கோவை, மதுரை, புதுவையில் இந்த வார வானிலை எப்படி?

published 10 months ago

சென்னை, கோவை, மதுரை, புதுவையில் இந்த வார வானிலை எப்படி?

கோவை: சென்னை, கோவை, மதுரை, மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நாளை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸில் இருந்து அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் இதே வானிலை தொடரும். ஏப்ரல் 1ஆம் தேதி சென்னையில் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், 2ம் தேதி 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையைப் பொறுத்தவரை, சென்னை விட அதிக வெப்பம் இந்த வாரம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸிலிருந்து அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 29ஆம் தேதி முதல் வெப்பம் ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 29ஆம் தேதி குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸிலிருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதே வானிலை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், வரும் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸில் இருந்து அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

புதுவையில் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸிலிருந்து அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe