கோவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனு எத்தனை..?

published 10 months ago

கோவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனு எத்தனை..?

கோவை: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதிகளில் எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது அதில் எத்தனை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது எத்தனை நிராகரிக்கப்பட்டது என்பது குறித்தான விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி கோவை நாடாளுமன்ற தொகுதியில் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 41 வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 18 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய கட்சியை வேட்பாளர்களாகிய திமுக- கணபதி ராஜ்குமார், அதிமுக-சிங்கை ராமச்சந்திரன், பாஜக- அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி- கலாமணி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe