தங்கலான் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியானது மாஸ் அப்டேட்!

published 10 months ago

தங்கலான் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியானது மாஸ் அப்டேட்!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. திரைப்படத்தில்  பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் மற்றும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாக தங்கலான் பாடலுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றே வெளியாகவிருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கலான் மறுதேதி அறிவிக்கபடாமல் தள்ளிப் போனது.  

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்த பின்னர்  ஜூன் 26ஆம் தேதி தங்கலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe