கோவை வரும் பல்வேறு ரயில்களின் நேரம் மற்றும் சேவையில் மாற்றம்!

published 2 weeks ago

கோவை வரும் பல்வேறு ரயில்களின் நேரம் மற்றும் சேவையில் மாற்றம்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை:  பொறியியல் பணிகள் காரணமாக கோவை வரும் ரயில் நேரங்கள் மற்றும் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


போத்தனூர் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பின்வரும் ரயில்கள் 17.04.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்


1.    ரயில் எண்.13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி  கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது: இருகூர் - போதனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில் 2 நிமிடம் நிறுத்தப்படும்.

2.    ரயில் எண்.06819 ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் 17.04.2024 அன்று இருகூர் - போதனூர் வழித்தடத்தில் இயக்கப்படும், அதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது.


3.    ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 17.04.2024 அன்று இருகூர் - போதனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ௳த்திய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

4.    ரயில் எண்.22504 திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 17.04.2024 அன்று இருகூர் - போதனூர் வழித்தடத்தில் இயக்கப்படும்: அதன் விளைவாக கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிறுத்தம் தவிர்க்கப்படும்.


பின்வரும் ரயில் 17.04.2024 அன்று மாற்றியமைக்கப்படும்:

·         ரயில் எண்.06805 வழக்கமாக கோயம்புத்தூர் - ஷோரனூர் ரயில், கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 11.55 மணிக்குப் புறப்படும், 17ம் தேதி கோவையில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்படும்.


இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை கோவை நோக்கி ரயிலில் பயணிக்கும் மக்களிடம் பகிர்ந்து உதவிடுங்கள்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw