உங்கள் வீட்டு கியாஸ் சிலிண்டர்களை இனி இலவசமா பரிசோதிக்கலாம்!

published 9 months ago

உங்கள் வீட்டு கியாஸ் சிலிண்டர்களை இனி இலவசமா பரிசோதிக்கலாம்!

கோவை: சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக பரிசோதனை செய்வதற்கான வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.

இந்த சிலிண்டர்களை வீட்டின் அடுப்போடு இணைக்கும் ரப்பர் குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும், ரெகுலேட்டரை முறையாக ஆய்வு செய்ய வேண்டும், சிலிண்டர் டெலிவரி ஏஜென்சிகள் இதற்கு ரூ.200 கட்டணம் வசூலித்து வருகிறது.

இதனிடையே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கியாஸ் இணைப்புகளை சோதனை செய்ய எட்டு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளன.

அதன்படி, ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர், அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம் மற்றும் இயக்கம், அவசர எண் 1906 குறித்த விழிப்புணர்வு, அருகில் உள்ள தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் குறித்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் ஏஜென்சி ஊழியர்களே ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

பரிசோதனை செய்த பின் அது குறித்த விவரங்களை, மொபைல் ஆப்-ல் பதிவு செய்வர். இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் மொபைலுக்கு ஓ.டி.பி., எண் வரும். இந்த பரிசோதனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe