கோவையில் கடுமையான குடிநீர் பிரச்சினை; கண்ணுக்கு தெரியவில்லையா..? -எஸ்.பி.வேலுமணி...

published 1 week ago

கோவையில் கடுமையான குடிநீர் பிரச்சினை; கண்ணுக்கு தெரியவில்லையா..? -எஸ்.பி.வேலுமணி...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Di5OOIMCPha6vMceSju9G7

கோவை: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும்,
மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை. குடிநீர் பிரச்சினை விரைவில்  சரி செய்யவேண்டும்
என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவையில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக குடிநீர் தட்டுபாட்டை போக்க , விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி,


கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும்,
குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம் எனத்தெரிவித்த அவர்,குளங்கள் , அணைகள் தூர் வாரப்பட்டது.நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது.
ஆனால் இப்போது நீர்மேலாண்மையே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக பில்லூர், சிறுவாணி, அழியார் அணை ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர் வாரி இருக்க வேண்டும்.என தெரிவித்த அவர், புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட அமைப்பதில்லை எனவும் இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது 
லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தண்ணீர் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை எனவும் அதேபோல் மாநகராட்சியில் முறையாக குப்பை எடுக்க வில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும்  சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை எனத்தெரிவித்த அவர்,
அத்திகடவு அவினாசி திட்டத்தை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் கோவை எஸ்ஐஎச்எஸ் பாலம் விரைத்து முடிக்க வேண்டும். நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் மேலும் 
பொதுகழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதிக்கவேண்டும்,
சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது.அவற்றை வேகமாக போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.


மேலும் தென்னை விவசாயிகள் லாரியில் தண்ணீர் வங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள்  தடுக்கின்றனர். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை.என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி,
மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை. குடிநீர் பிரச்சினை விரைவில்  சரி செய்யவேண்டும்
எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw