ரத்தினக் கற்களால் உருவான உடையில் மிளிரும் ஆலியா பட்!

published 9 months ago

ரத்தினக் கற்களால் உருவான உடையில் மிளிரும் ஆலியா பட்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2024 எனும் ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது  நடிகை ஆலியா பட்  அணிந்திருந்த உடை தற்போது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.  

மெட் காலா 2024 நிகழ்ச்சியில் ஆலியா பட் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் பல நடிகைகள் கலந்து  கொண்டுள்ளனர். அவர்கள்  விதவிதமான உடையை அணிந்திருப்பார்கள்.


உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள்.  இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன்  ஆகியோர் இதில்  பங்கேற்வில்லை. இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த ஆடையானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இந்த  புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர் அணிந்துள்ள உடை, கண்ணாடி மணிகள், விலையுயர்ந்த ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி  163 நபர்களால் இந்த புடவை உருவாக்கப்பட்டுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe