அரண்மனை 4: தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

published 9 months ago

அரண்மனை 4:  தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரண்மனை 4 படத்தில் நடிக்க  நடிகை தமன்னா எவ்வளவு  சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.   இதுவரை  அரண்மனை 4 படம் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

article_image3

படத்தில் வந்த அச்சச்சோ பாடல் பிரபலமாகி விட்டது.  மக்கள் மத்தியில் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலுக்கு தமன்னாவும், ராஷி கன்னாவும் சேர்ந்து சூப்பராக ஆடியிருக்கிறார்கள்.  மேலும் குஷ்புவும், சிம்ரனும் சேர்ந்து ஆடிய பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி.க்கு தங்கையாக நடித்திருந்தார் தமன்னா.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால்   இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் தமன்னாவுக்கு இது  குறைவான சம்பளம்  எனவும் கருத்து நிலவுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe