சூலூர் அருகே 13 வருடங்களுக்கு பின் நடைபெற்ற படுகள திருவிழா...

published 9 months ago

சூலூர் அருகே 13 வருடங்களுக்கு பின் நடைபெற்ற படுகள திருவிழா...

கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காடம்பாடி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அண்ணன்மார் மற்றும் தங்காத்தாள் திருக்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பிரசித்தி பெற்ற படுகள திருவிழா கோயில் சீரமைப்பு பணிகளால் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. அண்மையில் அண்ணன்மார் கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு விமர்சியாக நடத்தப்பட்டது. 

 

இதையடுத்து ஊர் பொதுமக்கள் இணைந்து  படுகள பெருவிழாவை நடத்த முடிவெடுத்தனர். அதன்படி படுகளப் பெருவிழ கடந்த 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

தொடர்ந்து நேற்று தங்காத்தாள் மற்றும் பெரியகாண்டியம்மன் வானவேடிக்கையுடன் அண்ணன்மார் கோவிலுக்கு புறப்படுதல், அம்மை அழைத்தல், அண்ணன்மார் சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரியண்ணசாமி வேடர்பறி மற்றும் கிளி வேட்டைக்கு புறப்படுதல், கட்டுச்சோறு கட்டுதல் மற்றும் படுகள பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 

 

பெரியண்ணசாமி குதிரை வாகனத்தில் உலா வந்த போது ஆண்கள்,பெண்கள் என ஏராளமான பக்தர்கள் அருள் வந்து ஆங்காங்கே படுகளம் விழுந்தனர். படுகளம் விழுந்த பக்தர்கள் கோயில் முன்பு படுகளபட்டியில் கிடத்தப்பட்டனர். 

தொடர்ந்து உடுக்கை பாடலுடன் படுகள பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் மீண்டும் எழுப்பப்பட்டனர். இந்த படுகள பெருவிழாவில் காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார காண மகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe