என்னடா இது ஊட்டி மலை ரயிலுக்கு வந்த சோதனை!

published 8 months ago

என்னடா இது ஊட்டி மலை ரயிலுக்கு வந்த சோதனை!

கோவை: இடர்பாடுகளுக்குப் பின் நீலகிரி மலை ரயில் நேற்று தான் தொடங்கப்பட்டது; இதனிடையே மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட  இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கலாம்.

அடர் வனத்தின் நடுவேயும் காட்டாறுகளுக்கு மேல் அமைந்துள்ள உயர்மட்ட பாலம், மலை குகைகளுக்குள் புகுந்து செல்லும் இந்த ரயிலின் இனிமையான பயணத்தை அனுபவித்து மகிழ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மலை ரயில் பாதை அமைந்துள்ள வன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து. இதனால் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 19ம் தேதி ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மண் சரிவுகள் அகற்றப்பட்டு ரயில் பாதை சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இன்று முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது. இதனிடையே அடர்லி அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe