கோவையில் கள்ள சாவி போட்டு வாகன திருட்டு- சிறுவன் உட்பட நான்கு பேர் கைது, 12 வாகனங்கள் பறிமுதல் .…

published 8 months ago

கோவையில் கள்ள சாவி போட்டு வாகன திருட்டு- சிறுவன் உட்பட நான்கு பேர் கைது, 12 வாகனங்கள் பறிமுதல் .…

கோவை: கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் காவல் துறையினர்  திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதை தொடர்ந்து ஆர்.எஸ் புரம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் ஒன்று வந்தது. அதன் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஒருவனை மடக்கிப் பிடித்தனர். 

காவல்  துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், மனோஜ் , 17 வயது சிறுவன் மற்றும் தடாகம் பகுதியைச் சேர்ந்த ஆசாருதீன் என்பது தெரிய வந்தது. மேலும் கோவை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை திருடி அந்த வாகனங்களை அசாருதீனிடம் ஒப்படைத்து. 

ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூபாய் 2,500 ரொக்கமாக 3 பேரும் வாங்கி உள்ளனர்.  அந்த வாகனங்களை ஆசாருதீன் ரூபாய் 4,500 முதல் 5,000 வரை மற்றவர்களிடம் அடகு வைத்து உள்ளார். இதுபோன்று மூன்று பேரும் போலி சாவிகளை பயன்படுத்தி 20 - க்கு மேற்பட்ட சாலையோர மற்றும் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை எளிதாக 
திறந்து திருடி உள்ளது தெரிய வந்தது. 

4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், மூன்று பேரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe