சமூகவலைதளத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு குண்டாஸ்- கோவை போலீசார் நடவடிக்கை…

published 8 months ago

சமூகவலைதளத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு குண்டாஸ்- கோவை போலீசார் நடவடிக்கை…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஷ்வதர்ஷினி(44). இவர் பேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தான் ‘டைகர்வே’ என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். 

பின்னர் பணத்தை திரும்ப கேட்டபோது செலினாவை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து செலினா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், செல்வபுரம் போலீசார் கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்வதர்ஷினியை கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விஷ்வதர்ஷினி காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டுவது போல பேசிய ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அளித்த புகாரின்பேரிலும் அவர் கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே விஷ்வதர்ஷினி மீது கடந்த 24.01.2024ம் தேதி கோவை துடியலூர் காவல் நிலையத்தில் போலீசாரை ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் கடந்த 2020ம் ஆண்டு சமூக வலைதளத்தின் மூலம் நண்பர் போல் நடித்து, பிரகாஷ் ஸ்வாமி என்ற பத்திரிக்கையாளரை முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பி விடுவேன் மிரட்டிய வழக்குகளும் உள்ளன.
 

மேலும் விஷ்வதர்சினி மீது கடந்த 2018ம் வருடம் சிறுமியை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் விஷ்வதர்ஷினிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

விஷ்வதர்ஷினி என்பவர் தொடர்ந்து மிரட்டுவது, அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் மத்திய பெண்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe