விமானத்துறையில் வேலை: டிகிரி, இன்ஜினியரிங் தகுதி... 1,77,500 வரை சம்பளம்!

published 8 months ago

விமானத்துறையில் வேலை: டிகிரி, இன்ஜினியரிங் தகுதி... 1,77,500 வரை சம்பளம்!

இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வு AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஆண், பெண் இருவருமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் - 304

Flying – 29,  Ground Duty (Technical) – 156,  Ground Duty (Non-Technical) – 119 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

Flying பணியிடங்களுக்கு - ஏதாவது  ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல், கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

Ground Duty (Technical) பணியிடங்களுக்கு - ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவுகளில் பொறியியல்  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 56,100 – 1,77,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கத்தில்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2024 ஆகும்.

மேலும் விவரம்

இந்த  பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://afcat.cdac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe