முற்றியது மோதல்: தமிழக பா.ஜ.க-வுக்கு ‘வாய்ப்பூட்டு’; அண்ணாமலை முடிவு! - VIDEO

published 5 months ago

முற்றியது மோதல்: தமிழக பா.ஜ.க-வுக்கு ‘வாய்ப்பூட்டு’; அண்ணாமலை முடிவு! - VIDEO

கடுங்கணியன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், மத்தியில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மைனாரிட்டி அரசாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பா.ஜ.க.

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி சென்றார் அண்ணாமலை. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தாலும் அண்ணாமலைக்கு மந்திரி பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக பா.ஜ.க தொண்டர்கள் கூறிக்கொண்டனர்.

இந்நிலையில், "தமிழகத்தில் பா.ஜக - அ.தி.மு.க கூட்டணி அமைத்திருந்தால் இரு கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கலாம். அண்ணாமலையின் ஓவர் பேச்சு கூட்டணியைச் சிதைத்தது’ என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.

அதை ஏற்றுக்கொள்ளும் வகையில், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநரும் தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை முன்வைத்தார்.

குறிப்பாகச் செய்தியாளரிடம், ‘‘இந்தத் தேர்தல் வெற்றிகரமான தோல்விதான். பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க-வை டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறோம். பல இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். ஆனால், எம்.பி சீட் கிடைக்கவில்லையே.

தேர்தல் என்பது வாக்கு சதவீதத்துக்கு மட்டுமில்லை. இப்போது பெற்ற வாக்கு சதவீதம் அடுத்துவரும் தேர்தலுக்கு நமக்கு கை கொடுக்குமா என்பது சந்தேகம்தான். 
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகளை எந்த மேடையின் முன் வைக்கிறோம் என்பதைப் பொறுத்தது. இந்தக் கருத்தை முன்வைப்பதால் நான் தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசுகிறேன் என்பதல்ல. ஆனால், பல ஆண்டுகளாக அரசியல் தளத்தில் இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.

ஆகவே, அ.தி.முக - பா.ஜ.க கூட்டணி அமைத்திருந்தால் கிட்டத்தட்ட 35 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கலாம் என்பது என் ஆதங்கம். ஒவ்வொரு மாநில தலைவருக்கும் ஒரு வியூகம் இருக்கும். தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் (அண்ணாமலை) இந்தத் தேர்தலைத் தனித்து சந்திக்கலாம் என முடிவெடுத்திருக்கலாம்.

அதில் தவறில்லை. ஆனால், கள நிலவரமும் முடிவும் வேறொன்றாக உள்ளதை நான் கூறுகிறேன்.

வாக்கு சதவீதம் அதிகரிப்பதாகச் சொல்கின்றனர். இதற்கு முன்பு 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீதத்திற்கு மேல் பா.ஜ.க வாக்கு சதவீதத்தைப் பெற்றது. ஆகவே, நம் தவறான வியூகத்தால் எதிரி வளர்ந்து விடக் கூடாது என்பதில் நான் கவனத்தோடு இருக்கிறேன்."
இவ்வாறு பேட்டி அளித்திருந்தார்.

தமிழிசையின் இந்தக் கருத்தால், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது; அண்ணாமலையை ரஜினியாகப் பார்க்கும் அவரின் ரசிகர்களும், கோவையிலுள்ள கட்சியினரும், முக்கியமாக தொழில் துறையினரும் எதிர்பார்த்தது போல, அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இப்போது தமிழிசை மற்றும் எஸ்.பி.வேலுமணியின் குற்றச்சாட்டுகளால், அவருடைய மாநிலத் தலைவர் பதவிக்கும் ஆபத்து நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 11) டில்லியில் இருந்து கோவை வந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்காமல், காரில் ஏறியவர், "இனி பா.ஜ.க அலுவலகத்தில் மட்டும் தான் செய்தியாளர் சந்திப்பு. என் வாழ்வில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை. கட்சியில் உள்ள அனைவரது செய்தியாளர் சந்திப்பும் அப்படித்தான் நடைபெறும். பாத்ரூம் போகும்போது... வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்.

செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தவுள்ளோம். இது தொடர்பான அலுவலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் கூறிச் சென்றார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 11) டில்லியில் இருந்து கோவை வந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்காமல், காரில் ஏறியவர், "இனி பா.ஜ.க அலுவலகத்தில் மட்டும் தான் செய்தியாளர் சந்திப்பு. என் வாழ்வில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை. கட்சியில் உள்ள அனைவரது செய்தியாளர் சந்திப்பும் அப்படித்தான் நடைபெறும். பாத்ரூம் போகும்போது... வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்.

செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தவுள்ளோம். இது தொடர்பான அலுவலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் கூறிச் சென்றார்.


"தமிழிசை செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தது அண்ணாமலைக்குப் பெரும் சிக்கல்களைக் ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் அவருக்குப் பதவிக்குப் பதில் அறிவுரையே கிடைத்திருக்கிறது.

இனி இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக, தமிழக பா.ஜ.க தலைவர்கள் தனித்த முறையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக் கூற முடியாதபடி வாய்ப்பூட்டு போடவே, செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் உட்கட்சி பூசல் வெளியே தெரியாமல் மறைத்துவிடவும்; தனக்கு எதிராக தன் கட்சியினரே பேசுவதைக் கட்டுப்படுத்தவும் முடியும் என அண்ணாமலை கருதுகிறார்.

ஆனால், இது அண்ணாமலைக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது" என அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர்.

அண்ணாமலை-தமிழிசை பேச்சு குறித்த வீடியோவை காண லிங்க்-ஐ சொடுக்கவும்: https://youtu.be/p6Uc0YqI1yQ
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe