ஆனைமலை பகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி...

published 7 months ago

ஆனைமலை பகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி...

கோவை: சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆனைமலை வட்டாரத்திற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆனைமலை வட்டாரத்திற்கான வளமிகு வட்டார
வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2023-2024 ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலுவையாக உள்ள 20 பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அவற்றினை விரைந்து முடிக்கவும் பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு பெறப்பட்ட எடுத்துக்கொள்ளப்பட்டது. 15 முன்மொழிவுகள் பரிசீலனைக்கு ஆனைமலை வட்டாரம், கோட்டூர் மற்றும்
வேட்டைக்காரன்புதூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்ட பெறப்பட்ட முன்மொழிவுகளும், வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளும் மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மகளிர் குழுவிற்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் புளி பதப்படுத்தி மதிப்புக்கூட்டுதல் செய்யும் பணிக்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளமிகு வட்டாரமாக கோயம்புத்தார் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனைமலை வட்டாரம் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் எந்தெந்த குறியீடுகளில் பின்தங்கி உள்ளது என கள ஆய்வு மற்றும் துறை வாரியான அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக திட்டங்கள் மூலம் பணிகளை தேர்வு செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாநில திட்டக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்பேராசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் அரசுத் திட்டங்களை எளிமையாகவும் விரைவாகவும் மக்களிடம் சேர்க்கும் விதமாக முன்மொழிவுகள் தயார் செய்து வழங்கவும் அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe