Breaking news : கள்ளச்சாராயம் குடித்து கோவை மருத்துவமனைகளில் பலர் அனுமதி!

published 7 months ago

Breaking news : கள்ளச்சாராயம் குடித்து கோவை  மருத்துவமனைகளில் பலர் அனுமதி!

கோவை: கள்ளச்சாராயம் குடித்த மஞ்ச நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பல ஆயிரம் லிட்டர்கள் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பல் கைதாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்வவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று மருத்துவமனை வட்டாங்கள்ள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் ஓய்வதற்குள் உடுமலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உடுமலை அருகே மாவடப்பு மலைவாழ் கிராமப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதை குடித்த மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்ள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயத்துடன் மதுவை கலந்து குடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

சார்புகளற்ற செய்திகளை உடனுக்குடன் பெற NewsCloudsCoimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe