பைக்கில் சீறும் கோவையின் குட்டி சுட்டி..! : குவியும் பதக்கங்கள்.!

published 2 years ago

பைக்கில் சீறும் கோவையின் குட்டி சுட்டி..! : குவியும் பதக்கங்கள்.!

கோவை: கோவை போத்தனூரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் வோல்டோ. 7 வயதான இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட வோல்டோ தனது 5 வயதில் தந்தை கேசவன் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் உதவியுடன் முதல் முறையாக சிறுவர்களுக்கான பைக் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

ஒரு சில நாட்களிலேயே பைக் ஓட்ட துவங்கிய வோல்டோ தற்போது சீறிப்பாயந்து பதக்கங்களை குவித்து வருகிறார். வோல்டோ டெர்ட் பைக் எனப்படும் மண் மற்றும் மேடுகளில் பைக் ஓட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

மாநில அளவிலான சிறுவர்களுக்கான பைக் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்த வோல்டோ எம்.ஆர்.எஃப்  நிறுவனம் நடத்திய சிறுவர்களுக்கான பைக் பந்தயத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.

மண் மற்றும் மேடுகளில் அச்சமின்றி சீறிப்பாயும் வோல்டோ தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், சிறந்த பந்தய வீரராக வேண்டும் என்றும் இலக்குகளை நிர்ணயித்து பயணித்து வருகிறார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe