மருதமலையில் சாலையை கடந்து சென்ற காட்டுயானை கூட்டம்- வைரல் வீடியோ காட்சிகள்...

published 7 months ago

மருதமலையில் சாலையை கடந்து சென்ற காட்டுயானை கூட்டம்- வைரல் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் நடமாட்டம் என்பது சற்று அதிகமாகவே உள்ளது.

இந்த யானைகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அவ்வப்போது ஊருக்குள் வரும் யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மருதமலை முருகன் சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிந்து வருகின்றன.இதனிடையே மருதமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மருதமலை பகுதியில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/EwvrdoWmBF8?si=YrQCfiAvG9VsyPen

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe