காங்கிரசார் கொண்டாடிய விழா!  கோவையில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்!

published 7 months ago

காங்கிரசார் கொண்டாடிய விழா!  கோவையில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்!

கோவை: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனிடையே, காமராஜரின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

இதன் ஒருபகுதியாக, கோவை ராம் நகரில் உள்ள டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல்கலாம் டிரீம் சிறப்புப் பள்ளியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி, பிரிவு சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் நாற்பது பேருக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகம், எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள், காமராஜர் வேடமணிந்தும் கதை, கட்டுரை, பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் அசத்தலான திறமைகளை, பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர். 

இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன், இளைஞர் காங்கிரஸ் கமிட்டி ஜி.வி.நவீன்குமார்,

வள்ளலார் வைத்தியசாலை துணைச் செயலாளர் தேவகோவிந்த ராஜு, மேக்ஸ்வெல் சேரிட்டபிள் டிரஸ்ட் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe