NewsClouds செய்தி எதிரொலி: 10 ஆண்டுகளாக வீட்டில் அடைந்து கிடந்த தாய்-மகளுக்கு பிறந்தது விடிவு!

published 4 months ago

NewsClouds செய்தி எதிரொலி: 10 ஆண்டுகளாக வீட்டில் அடைந்து கிடந்த தாய்-மகளுக்கு பிறந்தது விடிவு!

கோவை: பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வந்த தாய் மகளின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சுத்தப்படுத்தியுள்ளனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தாய்-மகள், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வந்தனர். பல வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாததால் வீடே குப்பைக் கூளமாக இருக்கின்ற காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

வீட்டிற்குள் எறும்பு, கரையான், பல்லி, பூரான், கரப்பான், எலி மூட்டைப்பூச்சி உள்ளிட்ட ஜந்துக்களும் நிறைந்திருந்தன். வீட்டில் வாழ்ந்து வரும் தாயும், மகளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

ஈரநெஞ்சம் மகேந்திரன் இந்த தவலை வெளிக்கொண்டு வந்த நிலையில், இகுறித்து குறித்த வீடியோ செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் முதலில் பதிவு செய்தது.

இதனிடையே அந்த வீட்டை அதிகாரிகள் சுத்தப்படுத்தியுள்ளனர். தாய் மகளுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்திக்கான வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்… 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe