SBI வங்கி வேலைவாய்ப்பு: 68 பணியிடங்கள்... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

published 6 months ago

SBI வங்கி  வேலைவாய்ப்பு: 68 பணியிடங்கள்... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

SBI வங்கி சார்பில்  விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதில்  மொத்தம் 68 காலியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன. Officers (Sportsperson) – 17, Clerical (Sportsperson) – 51 என மொத்தம்  68 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஹாக்கி, கிரிக்கெட்,  கூடைப்பந்து,  கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ் ஆகிய  8 துறைகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க  வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும்.
(இன்னும் சில தகுதிகளும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள அறியுறுத்தப்படுகிறது.)

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க   கடைசி தேதி 14.08.2024 ஆகும்.

Shortlisting, Assessment Test மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.  இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe