கோவையில் மாடுகளுக்கு வைத்திருந்த தவிடை ருசிபார்த்த காட்டுயானைகள்...

published 6 months ago

கோவையில் மாடுகளுக்கு வைத்திருந்த தவிடை ருசிபார்த்த காட்டுயானைகள்...

கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் அதிகமாக உள்ளது. வன விலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருள்கள் இருக்கும் இடங்கள்,  விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.   வனத்துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து உடனடியாக அதனை வனப்பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே, கெம்பனூரில் உள்ள விவசாயி கதிரவன்  தனது தோட்டத்திற்கு நள்ளிரவு வந்த இரண்டு காட்டுயானைகள் மாட்டுக்கொட்டகையில் அறையில்  மாடுகளுக்கு வைத்திருந்த தவுடு மூட்டையை சாப்பிட்டு சென்றுள்ளன. அறையின் கதவை உடைத்து தவுடை மூட்டையோடு சாப்பிட்டு சென்றுள்ளன.

நல்வாய்ப்பாக மாட்டுக்கொட்டகையில் இருந்த மாடுகளை எதுவும் செய்யாமல் சென்றுள்ளன.  இதனை விவசாயி கதிரவன் செல்போனில் வீடியோ பதிவு செய்து தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை இரவோடு இரவாக வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/y2sTXUa27Ss

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe