கோவை மக்களே... ரீல்ஸ் செய்து போலீசாரிடம் பரிசு பெறலாம்...!

published 6 months ago

கோவை மக்களே... ரீல்ஸ் செய்து போலீசாரிடம் பரிசு பெறலாம்...!

கோவை: ரீல்ஸ் எடுத்து பரிசு பெறலாம் என கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பு குறித்தும் கோவை மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், மாநகர காவல்துறை சார்பில் ரீல்ஸ் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ் பிரியர்கள் சைபர் கிரைம், போதை ஒழிப்பு, குற்றத்தடுப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான ரீல்ஸ்களை எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் @Coimbatore_City_Police கணக்கை டேக் செய்து பதிவிட வேண்டும்.

இதில் சிறந்த 2 ரீல்ஸ்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும், மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

ரீல்ஸ்களை வரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் அப்லோடு செய்ய வேண்டும். போட்டியின் முடிவு 17ம் தேதி அறிவிக்கப்படுகிறது. ரீல்ஸ் பிரியர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe