'GOAT' பட நடிகை மீனாட்சி சௌத்ரி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

published 6 months ago

'GOAT' பட நடிகை மீனாட்சி சௌத்ரி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

GOAT படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரி கருப்பு நிற சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் படத்தின் தொகுப்பு.

இவரின் பூர்வீகம் ஹரியானா. மாநில அளவில் நீச்சல் வீராங்கனையாக, பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்துள்ளார். இவர் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாடலிங்கில்  ஆர்வம் கொண்டு உள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் கொலை படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார் மீனாட்சி சௌத்ரி. தொடர்ந்து, நடிகர்  விஜய்யுடன் G.O.A.T திரைப்படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது இவருக்கு. 

புதுமுக நடிகை மீனாட்சிக்கு விஜய் உடன் நடிக்க மிக விரைவிலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது.  இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என  பேட்டி ஒன்றில் தெரிந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட்  படம்  உருவாகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மீனாட்சி சௌத்ரி, தமிழில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் நடித்துள்ளார். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் மீனாட்சி சௌத்ரி. 

அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் இருக்கும் தனது அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்களை இன்ஸ்டாவில்  ஷேர் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe