KVB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... உடனே விண்ணப்பிங்க!

published 5 months ago

KVB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... உடனே விண்ணப்பிங்க!

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் சார்பில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளை விற்பனை மற்றும் சேவை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.) சம்பளம் வங்கியின் விருப்பப்படி நிர்ணயிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரத்தில் பணியமர்த்தப்படுவர். இந்த பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி  15.09.2024 ஆகும்.

Registration, Pre – Screening, Personal Interview, Offer, Background & Medicals Checks, Onboarding, Posting ஆகிய  படிநிலைகள் அடிப்படையில் தகுதியான  நபர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கான முறை, தேதி, இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது  மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும். இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe