மருதமலை அருகே வீட்டின் கேட்டை திறக்க முயற்சித்த காட்டுயானைகள்- சிசிடிவி காட்சிகள்...

published 4 hours ago

மருதமலை அருகே வீட்டின் கேட்டை திறக்க முயற்சித்த காட்டுயானைகள்- சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவை, மருதமலை, வடவள்ளி, தடாகம், சோமையநாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உணவு தேடி அலைந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, சௌந்தரராஜன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்த கேட்டின் கதவை திறக்க முயற்சி செய்தது. அந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கேட்டை திறக்க முடியாததால் தனது கூட்டத்துடன் அங்கு இருந்து கிளம்பி சென்ற காட்சிகளும் பதிவாகி உள்ளது.

வனப் பகுதியில் இருக்கின்ற உணவை தானாக தின்று வளரும் யானைகள் வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் மனிதன் பயிரிடப்பட்ட பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள், வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு போன்ற பொருள்களை ருசி கண்டு உன்ன துவங்கியதால், தற்பொழுது மீண்டும் வனப்பகுதியில் வறட்சி நிலை மாறிய பின்பும் வனப் பகுதிக்குள் செல்லாமல், கிராமப் பகுதிகளில் முகாமிட்டு உணவு தேடி அலைந்து திரிந்து கொண்டு உள்ளது.

இதற்கு தமிழக அரசு அறிவித்த படி வனப் பகுதியை சுற்றியும் வேலி அமைத்து ஊருக்குள் வராமல் தடுத்தால் மட்டுமே வனப் பகுதியில் இருக்கின்ற உணவை உண்டு உயிர் வாழ வனவிலங்குகள் கற்றுக் கொள்ளும், இதனால் பொது மக்களுக்கு, விவசாயிகளுக்கும் ஏற்படும் சேதம் தவிர்க்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே யானை - மனித  மோதலை தவிர்க்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DE1z6O9v7dv/?igsh=MXhyZ2prN2Z3czc1ZQ==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe