கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 தொழிலாளிகள் கைது...

published 6 months ago

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 தொழிலாளிகள் கைது...

கோவை: கோவை தெற்கு உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் ஷாஜகான்(45). கட்டுமான பொருட்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கட்டுமான பணி ஜிஎம் நகரில் நடைபெற்று வருகிறது. அதற்காக அவர் வீட்டு முன்பு கட்டுமான பொருட்களை வைத்திருந்தார். 

இந்நிலையில், சம்பவத்தன்று அங்கிருந்த மோட்டார், ஜேசிபி பேட்டரி, கார் பேட்டரி, செம்பு கம்பிகள், இரும்பு பொருட்கள் திருடு போனது. இவற்றின் மதிப்பு ரூ. 71 ஆயிரம் ஆகும். மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஷாஜகான் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் திருட்டில் ஈடுபட்டது கூலி தொழிலாளிகள் உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலமுருகன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த அப்துல்காதர்(22) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe