தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்...

published 5 months ago

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை  நடத்தியது. பட்டதாரிகள் தொழில்முறைப் பாதையில் செல்ல மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உத்திகளை வழங்குவதை கருத்தில் கொண்டு இந்த பட்டறை நடத்தப்பட்டது.

வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. மேலும் இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித் திறனை வளர்க்க இதுபோன்ற தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் மூலம் பெறலாம் என்று நிகழ்வின் முதன்மை விருந்தினர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர். வெங்கடேசன் கூறினார். வனக்கல்லூரியின் முதன்மையர் முனைவர் பாலசுப்ரமணியன் மாணவர்களை 'வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள். வேலை வழங்குபவர்களாக இருங்கள்'. நீங்கள் உங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி அதில் பல்வேறு பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பல்வேறு தொழில் வாய்ப்புகள், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் மற்றும் வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புத் துறைகளில் தேவையான அத்தியாவசிய
திறன்கள் குறித்து ஆழமான வழிகாட்டுதலை வழங்கிய புகழ்பெற்ற நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று
தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe